திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் இருந்து சாந்திநகர் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.