கழிவுநீர் கால்வாய் வேண்டும்

Update: 2026-03-15 09:53 GMT

கோவை மாநகராட்சி 87-வது வார்டு குனியமுத்தூர் அம்மன் கோவில் சாலை பி.கே.ஜி.கார்டன் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்