ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி பகுதி 1-ல் சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.