தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2025-08-03 17:00 GMT

திருச்சி மாநகராட்சி 49-வது வார்டு ஹனிபாகாலனி தெற்கு கடைசி தெரு பகுதியில் சாலையோரம் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரப்பு அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்