சுகாதார சீர்கேடு...

Update: 2025-08-03 11:38 GMT

திருவள்ளூர் மாவட்டம், வடக்கு ராஜவீதி சாலை மிகவும் பரபரப்பானது. இந்த சாலையில்தான் மாவட்ட சுகாதார அலுவலகமும் அமைந்துள்ளது. ஆனால் இந்த பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் கால்வாய்கள் திறந்த நிலையில் இருப்பதால் சுகாதாரம் மிகவும் கேடாக உள்ளது. மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களிடையே முக சுளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சரிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்