சென்னை கொருக்குப்பேட்டை தியாகப்ப செட்டி தெருவில் உள்ள சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியின் சுகாதாரம் மிகவும் சீர்கேடாகி உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவரும் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்மூடியை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.