வடிகால் வசதி தேவை

Update: 2025-08-03 07:07 GMT

பாகோடு ஊராட்சிக்கு உட்பட்ட கழுவன்திட்டை பகுதியில் குழித்துறை ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கழிவுநீர் பாய்வதுடன், சாலையும் சேதடைந்து காணப்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், ரெயில் நிலையத்துக்கு செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த சாலையில் கழிவுநீர் வடிந்தோட வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனில்குமார், முழுக்கோடு.

மேலும் செய்திகள்