கம்பம் நகராட்சி 26-வது வார்டு பார்க் ரோடு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் கால்வாயும் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி வீடுகள் முன்பு தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன், புதர்களையும் அகற்ற வேண்டும்.