ஆண்டிப்பட்டி தாலுகா ஜி.கல்லுப்பட்டி பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. சாலையோரத்தில் கால்வாய் போல் பள்ளம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்த நிலையில் உள்ள பள்ளத்தில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.