விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒ.மேட்டுப்பட்டி, வடக்கு தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் அதிகம் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.