திண்டிவனம் பாரதிதாசன் நகர் சாலை வழியாக செல்லும் வடிகால் வாய்க்காலில் செடி, கொடிகள் படர்ந்து தூர்ந்துபோய் காணப்படுகிறது. மேலும் அங்கு குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.