உளுந்தூர்பேட்டை அடுத்த பெரியகுறுக்கை காலனி மாரியம்மன் கோவில் அருகில் சாலையில் உள்ள வாய்க்காலில் சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதை தவிர்க்க வாய்க்காலில் புதிதாக சிமெண்டு சிலாப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?