சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புக்கட்டை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வாய்க்காலில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அங்கு தடு்ப்புக்கட்டை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.