பராமரிப்பற்ற கழிவுநீர் கால்வாய்

Update: 2025-07-13 17:46 GMT
திண்டிவனம் நகரில் உள்ள பெலாக்குப்பம், ரோஷணை மற்றும் பாரதிதாசன் சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கால்வாயானது தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்