நெய்வேலி அடுத்த ஊ.மங்கலம் ஊராட்சி வேப்பங்குறிச்சி, தெற்குவெள்ளூர் பகுதியில் வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.