குளத்தில் கலக்கும் கழிவுநீர்

Update: 2025-07-13 16:44 GMT
கூடலூர் நகரின் மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்துள்ளது. தற்போது இந்த குளம் நிரம்பி தண்ணீர் ததும்புகிறது. இதற்கிடையே குளத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் குளத்தில் கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால் குளத்தில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்