சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2025-07-13 14:33 GMT

நகலூர் ஊராட்சி 2-வது வார்டில் உள்ள புதூர் ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே புதூர் ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்