திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், லெட்சுமி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் சாலையில் சூழ்ந்துள்ள சாக்கடை நீரால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த கழிவுநீரால் கொசுக்கள் உருவாகுவதால் அங்கு குடியிருப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி அந்த பகுதியில் சுகாதாரத்தை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.