அகஸ்தீஸ்வரம் சந்திப்பு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் குப்பைகள், கழீவுகள் தண்ணீர் சரியாக வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவம் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.