சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரஸ்வதி வாசகர் தெரு பகுதியில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சிறிய மழை பெய்தாலும் கால்வாய் நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் போதிய கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.