திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால்

Update: 2025-05-25 13:24 GMT

தஞ்சை தெற்கு வீதி ஜவுளி செட்டி தெருவில் கழிவு நீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் மூடி அமைக்கப்படாமல் திறந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவு நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலுக்கு மூடி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்