சென்னை பெருங்குடி, நேரு நகர் 1-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீரானது குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபடுகிறார்கள். மேலும் இதில் கொசு உற்பத்தி ஆவதால் தொற்றுநோய் உண்டாகும் அபாயம் இருகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.