ராமநாதபுரம் நகரில் சில முக்கிய இடங்களில் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடன் காட்சியளிக்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடை முறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தவும், கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்படாதவாறு முறையாக பராமரிக்கவும் வேண்டும்.