கடலூர் முதுநகர் சங்கரநாயுடு தெரு, குமரகோவில் தெரு சந்திக்கும் இடத்தில் சாலையின் இருபுறமும் கழிவுநீர் செல்லும் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூடிபோட்டு மூடவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.