மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே தாசில்தார் குறுக்கு தெருவில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் கடந்த சில மாதாங்களாகவே அதில் மண் மற்றும் குப்பைகள் அடைத்து கழிவுநீர் நிரம்பி அடிக்கடி வெளியேறி தெருவில் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா