தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2025-05-18 10:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் வடக்குத்தெரு, முன்சீப் வீதி, தெற்கு தெரு மற்றும் ஊரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஆங்காங்கே தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி சில இடங்களில் தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்