தவளக்குப்பத்திலிருந்து பூரணாங்குப்பம் செல்லும் மெயின் ரோடு உள்ளது. அந்த ரோட்டில் வேணுகோபால் நகரில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சந்திப்பு வரை கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.