புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் உள்ள வடக்குத்தெரு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் வீதி, தெற்கு தெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் பல நாட்களாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இந்த கழிவுநீரில் ஊர்ந்து செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.