சுகாதார சீர்கேடு

Update: 2025-05-04 11:11 GMT

ஆலடி கிராமம் கடுக்கரை பகுதியில் சுமார் 180 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் கால்வாயில் சீராக தண்ணீர் வடிந்தோடாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை தூர்வாரி தண்ணீர் சீராக வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்