ஈரோடு பெரியார் நகர் 2-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இது முழுவதும் உடைந்து ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு அதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேதமடைந்த மூடி அகற்றப்பட்டு புதிதாக கான்கிரீட் மூடி போடப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.