திறந்த நிலையில் கழிவுநீர் வடிகால்

Update: 2025-04-27 11:07 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் நகராட்சி அலுவலகத்தில் இருந்து அரிசிக்காரத்தெரு சாலைக்கு திரும்பும் இடத்தில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும் வடிகாலில் தவறி விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலுக்கு மூடி அமைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்