சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் அருகே சிறிய மழை பெய்தால் கூட மழைநீர் தேங்குகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் அப்பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.