நோய் பரவும் அபாயம்

Update: 2025-04-20 12:24 GMT

கோவை அரசு ஆஸ்பத்திரி சாலை வி.சி.கே. லே அவுட் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இங்கு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வாரி நோய் பரவும் அபாயத்தை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்