கும்பகோணம் மாநகராட்சி 31-வது வார்டு ஶ்ரீராம் நகர் ௨-ம் தெருவில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலை முழுவதும் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும்.