அரியலூர் கீரைக்கார தெருவில் சாக்கடை கழிவுநீர் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.