சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை

Update: 2025-04-20 09:55 GMT
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் வடக்குத்தெருவில் பள்ளிவாசல் வீதியில் சாக்கடை கால்வாய் சேதமடைந்தும் தெற்கு தெரு கடைவீதி போன்ற பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்