செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடியில் உள்ள இலவச கழிப்பறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. இதனால் அதை உபயோகிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறை கட்டிடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.