பழனி ராஜாஜி ரோடு மதுரைவீரன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைவில் தூர்வார வேண்டும்.