கழிவுநீர் கால்வாய் மூடி மாற்றப்படுமா?

Update: 2025-04-13 14:12 GMT

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இதன் மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் குப்பைகள் மற்றும் கட்டைகளால் கால்வாய்யை சூழ்ந்து கால்வாய் மூடப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகில் சாக்கடை கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோயும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்