கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலை கக்கன் நகர் 1-வது வீதி உழவர் சந்தை அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.