மதுக்கரை அருகே திருமலையாம்பாளையம் பிரிவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பருவம் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதோடு மீண்டும் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.