திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மதுரை, தஞ்சை, கரூர், சேலம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் சென்னைக்கு செல்லும் தனியார் பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆண்களுக்கான கழிவறை கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த கழிவறையை பயன்படுத்த செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.