பெண்ணாடத்தில் இஸ்லாமியர் தெருவில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாய் மூடியானது உடைந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் கால்வாய் மூடியை சரிசெய்ய வேண்டியது அவசியம்.