கவுந்தப்பாடிபுதூர் சாய்பாபா கோவில் அருகே செல்லும் கீழ்பவானி கிளை வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வரும்போது கழிவுகள் அடித்து செல்லப்பட்டு ரோட்டோரம் ஒதுங்கி கிடக்கின்றன. மேலும் தண்ணீரும் ரோட்டில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுகளை அகற்றவும், வாய்க்காலில் கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?