சென்னை அடையாறு, டீச்சர்ஸ் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் கழிவு நீர் கால்வாய் மூடி சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழிகாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயால் பயங்கர தூர் நாற்றமும் வீசுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக புதிய கழிவுநீர் கால்வாய் மூடியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.