நடவடிக்கை தேவை

Update: 2025-04-06 12:01 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போட்டித்தேர்வுக்கு பயிலும் இடம் அருகே உள்ள பகுதி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் அப்பகுதியில் கொட்டப்படுகின்றன. செப்டிக் டேங்கிலிருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே மாணவர்கள் அந்த குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

மேலும் செய்திகள்