அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பூங்கா நகரில் அம்மா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பூங்காவை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வீட்டு உரிமையாளர்கள் கழிவு நீரினை பூங்காவிற்குள் வெளியேற்றி வருகின்றனர். இதனால் பூங்காவிற்குள் சாக்கடை போல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் துர்நாற்றம் வீசுவதால் பூங்காவிற்குள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவே அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.