கோவை மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு கணக்குபிள்ளை தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறி தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.