கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையும், முத்துக்கிருஷ்ணன்பிள்ளை தெருவையும் இணைக்கும் வகையில் சாலை உள்ளது. இந்த சாலை சந்திப்பில் கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. சாலையின் நடுவே கழிவுநீர் செல்லும் குழாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்லாததால் இந்த நிலை ஏற்பட்டது. இதை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், அடைப்பை சரி செய்யாமல் சாலையை வெட்டி கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். ஆகவே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.