பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் அந்த தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.